க்ரைம்

திருத்தணி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை

இரா.நாகராஜன்

திருவள்ளூர்: திருத்தணி அருகே மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு ஆயுள் தண்டனை விதித்து, பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளது திருவள்ளூர் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றம்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன்(41). கூலி தொழிலாளியான இவர் தனது 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தாய் கடந்த 2019-ல் கடந்த திருத்தணி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அப் புகாரின் பேரில் தந்தை முருகன் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கு விசாரணை தற்போது திருவள்ளூரில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. முடிவுக்கு வந்த இந்த வழக்கின் விசாரணையில் முருகன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதி சரஸ்வதி இன்று தீர்ப்பளித்தார். அத்தீர்ப்பில் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை முருகனுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளார்.

SCROLL FOR NEXT