க்ரைம்

சாத்தூர் திமுக வேட்பாளர் வீட்டில் 122 பவுன் நகை திருட்டு

செய்திப்பிரிவு

சாத்தூர்: ​விருதுநகர் மாவட்​டம் சாத்தூர் தொகுதி திமுக வேட்​பாளர் வீட்​டில் 122 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்​றுள்​ளனர்.

சாத்​தூர் சட்​டப்பேர​வைத் தொகு​தி​யில் திமுக சார்​பில் கடற்​கரை​ராஜ் போட்​டி​யிடு​கிறார்.

இவர் சாத்​தூர் அருகே உள்ள வெங்​க​டாசலபுரத்​தைச் சேர்ந்​தவர். இவரது மனைவி நிர்​மலா, முன்​னாள் ஊராட்சி ஒன்​றி​யத் தலைவர்.

          

நேற்று முன்​தினம் இரவு சாத்​தூர் தொகு​திக்கு உட்​பட்ட சத்​திரப்​பட்டிபகு​தி​யில் திமுக வேட்​பாளர் கடற்​கரை ராஜுவை ஆதரித்து மார்க்​சிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முக​ம் பிரச்​சா​ரம் செய்​தார்.

வேட்​பாளர் கடற்கரை ராஜ் வீட்​டில் தேர்தல் பணி தொடர்​பாக பலர் வந்து சென்றனர். அதைப் பயன்​படுத்தி மர்ம நபர்​கள் சிலர் நேற்று முன்தினம் இரவு வீடு புகுந்து 122 பவுன்தங்க நகைகளைத் திருடிச் சென்றுள்​ளனர்.

நேற்று காலை​யில் வீட்​டிலிருந்த பீரோவை குடும்பத்​தினர் பார்த்​த​போது அதிலிருந்த நகைகள் திருடுபோனது தெரிய​வந்​தது.

இதுகுறித்​து, கடற்​கரை ராஜின் மகள் வத்​சலாதேவி சாத்தூர் நகர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்தார். தடயவியல் நிபுணர் எஸ்​ஐ சுரேஷ்கு​மார் தடயங்​களைச் சேகரித்​தார்.

மோப்ப நாயும் துப்​புத்​துலக்​கும் பணி​யில் ஈடுபடுத்​தப்​பட்​டது. மாவட்ட எஸ்​பி ஸ்ரீநாதா விசா​ரணை மேற்​கொண்​டார். நகை திருட்​டில் ஈடு​பட்​டோரைப் பிடிக்க காவல் ஆய்வாளர் துரைப்​பாண்டி தலை​மை​யில் தனிப்​படை அமைத்து தீவிர விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்டு வருகிறது.

SCROLL FOR NEXT