சதீஷ்குமார், ரமேஷ், கார்த்திக்

 
க்ரைம்

கள்ளக்குறிச்சி வங்கியில் ரூ.1.21 கோடி மோசடி: அதிகாரி உட்பட 6 ஊழியர்கள் கைது

செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி: கள்​ளக்​குறிச்​சி​யில் தனியார் வங்​கிக் கிளை ஒன்று இயங்கி வரு​கிறது. இந்த வங்​கி​யின் மூலம் கள்​ளக்​குறிச்சி மாவட்​டத்​தில் உள்ள 430 மகளிர் சுய உதவிக் குழுக்​களுக்கு கடன் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த வங்கிக் கிளை​யில் இருந்து 430 மகளிர் சுய உதவிக்​குழுக்​களுக்கு கடன் வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த சுய உதவிக் குழுக்​களுக்கு கடன் வழங்​கு​வதில் கையாடல் நடந்​திருப்​ப​தாக புகார் எழுந்​தது. அதன்​பேரில் நடந்த விசா​ரணை​யில் வங்​கி​யில் பணிபுரியும் சிலர் போலியாக கையொப்​பமிடுதல் உட்​பட பல்​வேறு வழிமுறைகளில் ரூ.1 கோடியே 21 லட்​சத்து 61 ஆயிரத்து 685 ரூபாய் பணத்தை கையாடல் செய்​தது தெரிய வந்​தது.

ப்ரியா, எஸ்.பிரசாந்த், ஆர்.பிரசாந்த்

இது​தொடர்​பான புகாரின் பேரில் வங்​கி​யில் கடன் அதி​காரியாக பணிபுரிந்த சேலம் மாவட்​டம் ஆத்​தூரை அடுத்த முள்​ளுவாடியை சேர்ந்த வெங்​கடேசன் மகன் கார்த்​திக் (34), கடன் மேலா​ளரான ஆத்​தூர் அம்​பாசமுத்​திரத்தை சேர்ந்த சீம​ராஜா மகன் சதீஷ்குமார் (37), விற்​பனை அதி​காரி​களாக பணி​யாற்​றிய வி.பாளை​யத்தை சேர்ந்த சுப்​பிரமணி​யன் மகன் எஸ்.பிரசாந்த் (27), தென்​கீரனூரை சேர்ந்த ஆர்.பிரசாந்த் (28), காசாளரான கள்​ளக்​குறிச்சி சிறு​வங்​கூரை சேர்ந்த ரமேஷ் (33), ஆவணப்ப​திவாளர் பெரும்​பட்டை சேர்ந்த வினோத் மனைவி ப்ரியா (29) ஆகியோரை கைது செய்தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT