க்ரைம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 12 பேர் நீதிமன்றத்தில் சரணடைய மார்ச் 13 வரை கால அவகாசம்

செய்திப்பிரிவு

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்​கில் குற்​றம்​சாட்​டப்​பட்ட அஸ்​வத்​தாமன் உள்​ளிட்ட 12 பேரும் சரணடைய மார்ச் 13 வரை அவகாசத்தை நீட்​டித்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

பகுஜன் சமாஜ் கட்​சி​யின் மாநிலத் தலை​வ​ராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு படு​கொலை செய்யப்பட்​டார். இந்த வழக்​கில் குற்​றம் சாட்​டப்​பட்ட அஸ்​வத்​தாமன், ஹரிஹரன் உள்​ளிட்ட 12 பேருக்கு ஏற்​கெனவே முதன்மை அமர்வு நீதி​மன்​றம் வழங்​கி​யிருந்த ஜாமீனை ரத்து செய்த சென்னை உயர் நீதி​மன்​றம், மார்ச் 6-ம் தேதிக்​குள் விசா​ரணை நீதி​மன்​றத்​தில் சரணடைய உத்​தர​விட்​டிருந்​தது.

          

இந்​நிலை​யில், ஜாமீன் ரத்தை எதிர்த்து உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​ய​வுள்​ள​தால், சரணடைய 4 வாரம் காலஅவ​காசம் வழங்​கக் கோரி அஸ்​வத்​தாமன் உள்​ளிட்ட 12 பேரும் உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனுக்​களை விசா​ரித்த நீதிபதி சி.குமரப்​பன், அனைவரும் நீதி​மன்​றத்​தில் சரண் அடைவதற்​கான அவ​காசத்தை மார்ச் 13 வரை நீட்​டித்து உத்​தர​விட்​டுள்​ளார். அது​வரை விசா​ரணை நீதி​மன்​றத்​தில் காலை​யில் ஆஜராகி கையெழுத்​திட நிபந்​தனை விதித்​துள்​ளார்.

SCROLL FOR NEXT