கடலூர்: கடலூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் ஒரே நாளில் 7 இளம்பெண்கள் உள்ளிட்ட 12 பேர் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.
கடலூர் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த பள்ளி நீரோடையைச் சேர்ந்த தண்டபாணி மகள் ஜெனி (19), குறிஞ்சிப்பாடி அடுத்த மீனாட்சிபேட்டையைச் சேர்ந்த வேல்முருகன் மகள் மதுமிதா (18), சிதம்பரம் அடுத்த வைப்புச்சாவடியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி தேவி (21), கடலூர் முதுநகர் அடுத்த சுத்துக்குளத்தைச் சேர்ந்த கொடியரசன் மகன் விஜயஸ்ரீ (25), சேத்தியாதோப்பை அடுத்த கொண்ட சமுத்திரத்தைச் சேர்ந்த திவாகர் மனைவி சுஷ்மிதா (26), பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பத்தைச் சேர்ந்த ஹரிவாகசன் மகள் அஸ்வினி (22), கடலூரைச் சேர்ந்த 16 வயது சிறுவன், விருத்தாசலத்தைச் சேர்நத 17 வயது சிறுமி ஆகியோர் காணாமல் போயுள்ளனர்.
இதுதவிர, ராமநத்தத்தைச் சேர்ந்த மதியழகன் (22), புதுப்பேட்டையைச் சேர்ந்த குகன் (28), குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த கரிகாலன் (35), தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த தமிழ்வளவன் (30 ஆகியோரும் காணாமல் போயுள்ளனர். ஒரே நாளில் ஒரு மாவட்டத்தில் இருந்து 7 இளம் பெண்கள் உள்ப்ட 12 பேர் இப்படி காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தனித்தனியே அந்தந்த காவல்நிலையங்களில் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.