திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி - எளாவூர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி, கடந்த 2023-ம் ஆண்டு வீட்டில் தனியாக இருந்தார். எளாவூரை அடுத்த மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த ஜெகநாதன் (35), வீட்டுக்குள் நுழைந்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அரசு தரப்பில் வழக்கறிஞர் புவனேஸ்வரி ஆஜராகி வாதாடினார். ஜெகநாதன் மீதான குற்றங்கள் நிரூபணமானதையடுத்து, மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற உமாமகேஸ்வரி ஜெகநாதனுக்கு, வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம், பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்துக்கு 5 ஆண்டு சிறை, ரூ.10,000 அபராதம் விதித்தார்.
சிறுமிக்கு ரூ.1 லட்சம் ஒரு லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார். செங்குன்றம் அருகே 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 17 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.