சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 746, பெண்கள் 715 என மொத்தம் 1,461 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 543 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 69,805 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 23,557 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 697 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 8,222 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 1,472 ஆகவும், சென்னையில் 624 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில நாட்களாக தினந்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர்.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 17,073 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
94,420 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 15,208 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 197.11 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்துமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. >விரிவாக வாசிக்க: டெங்கு அலர்ட்: மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
மேலும், மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.