சென்னை: ‘பார்க்கிங்’ படத்தை தயாரித்த சினிஷ் தயாரிப்பில் அடுத்து உருவாகும் படத்துக்கு ‘நிஞ்சா’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
‘பார்க்கிங்’ படத்தை தயாரித்த சினிஷ் அடுத்ததாக தயாரிக்கவுள்ள படங்கள் குறித்த அறிவிப்பு விழா சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயன், கவின், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக் கொண்டார்கள். இந்த விழாவில் யூடியூபர் பாரத்தின் புதிய படத்தை சினிஷ் தயாரிக்கவிருப்பது அறிவிக்கப்பட்டது.
முருகு இயக்கவுள்ள இப்படத்துக்கு ‘நிஞ்சா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதில் நாயகியாக பிரத்னா நடிக்கவுள்ளார். இவர்களுடன் ஒரு நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பது டைட்டில் லுக் போஸ்டர் மூலம் உறுதியாகி இருக்கிறது. இதற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.
சாய் தேவானந்த் மற்றும் சினிஷ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவாளராக ஹரிஷ் கண்ணன், எடிட்டராக கணேஷ் சிவா ஆகியோர் பணிபுரியவுள்ளனர். இதன் படப்பிடிப்பு மற்றும் இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.