சென்னை: எம்.ஆர். மோஷன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான ‘யுவர்ஸ் லவ்விங்லி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. நலன் குமாரசாமியிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய முத்துராம் முருகன் இயக்கும் இப்படத்தில் ஆகாஷ் பிரேம்குமார் மற்றும் ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 2000-களின் தொடக்க காலப் பள்ளிப் பருவம், நட்பு மற்றும் முதல் காதல் நினைவுகளை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நெய்வேலி பகுதியில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இப்படத்திற்கு மகேஷ் செல்வராஜ் கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளதுடன், தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்திற்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்ய, ஏ.எல். ரமேஷ் படத்தொகுப்பையும், சகிஷ்னா சேவியர் இசையமைப்பையும் கவனித்துள்ளனர்.
மேலும், இன்பா பிரகாஷ் கலை இயக்கத்திலும், டேஞ்சர் மணி சண்டைக்காட்சிகளிலும், கலைக்குமார் நடன இயக்கத்திலும் பணியாற்றுகின்றனர். இவர்களுடன் ராம்ஜி, பக்ஸ், மைதிலி, சந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.