தமிழ் சினிமா

“பெண்கள் மட்டுமே சரியானவர்கள் என நினைக்கிறீர்கள்; ஆனால்...” - ரவி மோகன்

ஸ்டார்க்கர்

“பெண்கள் மட்டுமே சரியானவர்கள் என அனைவரும் நினைக்கிறீர்கள். ஆனால், ஆண்கள் தான் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், நமது நீதித்துறை கூட அதைப் புரிந்துக் கொள்கிறது” என்று ரவி மோகன் பதிவிட்டுள்ளார்.

ரவி மோகன் – ஆர்த்தி விவகாரத்து வழக்கு தொடங்கியதில் இருந்து, இணையத்தில் ரவி மோகன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியான வண்ணமுள்ளன. மேலும், சிலர் ரவி மோகனுக்கு எதிராகவும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ரவி மோகன்.

          

அப்பதிவில் ரவி மோகன், “நான் அமைதியாக என் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். இதை மீண்டும் கூறலாம் என நினைக்கிறேன். நீங்கள் சொல்ல விரும்பும் அனைத்தையும் மீண்டும் கூறுங்கள். ஏனென்றால் பெண்கள் மட்டுமே சரியானவர்கள் என அனைவரும் நினைக்கிறீர்கள். ஆண்கள் தான் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள், நமது நீதித்துறை கூட அதைப் புரிந்துக் கொள்கிறது.

ஒரு நாள் அனைவரும் என்னையும், நான் நேசிக்கும் மக்களுக்காக என்ன செய்தேன் என்பதையும் அறிவீர்கள். தயவுசெய்து என்னை வாழ விடுங்கள், உங்களது எதிர்மறை எண்ணங்களை நீங்களே வைத்துg கொள்ளுங்கள். நான் என் பாதையில் சென்று கொண்டிருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார் ரவிமோகன். தற்போது ரவி மோகன் இரண்டு படங்களை தயாரித்து வருகிறார். அதன் அடுத்தகட்டப் படப்பிடிப்பு பணிகள் விரைவில் துவங்கும் என தெரிகிறது.

SCROLL FOR NEXT