சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்துக்கு வெளியான டீசர், இணையவாசிகளால் கலாய்ப்புக்கு உள்ளானது.
தற்போது படத்தின் இசையமைப்பாளர் குறித்த சர்ச்சையில் அனிருத் தலை அடிபடுகிறது. அவர் புது மாப்பிள்ளை என்பதால், அரசன் படத்துக்கு இசையமைக்க மாட்டார் என்ற தகவல் பரவியது.
ஆனால், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு அதை மறுத்துள்ளார்: “அடுத்தகட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும். ‘அரசன்’ படத்தின் ‘ஃபயர்’ புரோமோ யூடியூபில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. அரசனையும் அனிருத்தையும் பிரிக்க முடியாது” என்று கூறியிருக்கிறார். இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக யோகலட்சுமி நடிக்கிறார்.