தமிழ் சினிமா

துருவ் விக்ரமின் புதிய படத்தின் பணிகள் தொடக்கம்

ஸ்டார்க்கர்

துருவ் விக்ரமின் புதிய படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது.

’பைசன்’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பல்வேறு இயக்குநர்களிடம் கதைகள் கேட்டு வந்தார் துருவ் விக்ரம். இறுதியாக அறிமுக இயக்குநர் கரண் அரவிந்த் குமார் கூறிய கதை துருவ் விக்ரமுக்கு மிகவும் பிடித்திருந்தால், இதில் நடிப்பதை உறுதிப்படுத்தினார் துருவ் விக்ரம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரிக்கவுள்ளது.

இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பூஜையில் இயக்குநர்கள் சசி, 'ஹாய் நானா' சௌரவ், ஆதிக் ரவிச்சந்திரன், ஆண்டனி பாக்யராஜ் மற்றும் ராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். இதன் படப்பிடிப்பினை ‘டியூட்’ இயக்குநர் கீர்த்தீஸ்வரன் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

கரண் அரவிந்த் குமார் இயக்கும் இப்படத்தில் பிருத்வி பாண்டியராஜன், சாய் தீனா உள்ளிட்டோர் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிப்பது உறுதியாகி இருக்கிறது. இப்படத்தின் கதையினை கரண் அரவிந்த் குமாருடன் இணைந்து ஷபி எழுதியிருக்கிறார். இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக விக்கி, எடிட்டராக ஜெயசூர்யா, ஆக்‌ஷன் காட்சிகளை விக்ரம் மோர் ஆகியோர் மேற்கொள்ளவுள்ளனர்.

இதில் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கும் இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

SCROLL FOR NEXT