தமிழ் சினிமா

ஓடிடியில் மார்ச் 6-ல் வெளியாகிறது ‘வித் லவ்’

ஸ்டார்க்கர்

மார்ச் 6-ம் தேதி ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் ‘வித் லவ்’ வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘வித் லவ்’. செளந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் மகேஷ் இருவரும் இணைந்து தயாரித்த இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படம் ஃநெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் மார்ச் 6-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

          

மதன் இயக்கத்தில் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்த படம் ‘வித் லவ்’. இப்படத்தின் மூலமாக நாயகனாகவும் அறிமுகமானார் ‘டூரிஸ்ட் பேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த். இப்படத்தின் வெற்றியினால் தற்போது நாயகனாக நடிக்க பல்வேறு வாய்ப்புகள் அபிஷனுக்கு வந்து கொண்டிருக்கிறது.

25 நாட்கள் திரையிடப்பட்டு 35 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக ‘வித் லவ்’ படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இப்படத்தின் மூலம் படக்குழுவினருக்கு நல்ல லாபம் கிடைத்தது. இதனால் எம்.ஆர்.பி நிறுவனம் மற்றும் ஜியோன் பிலிம்ஸ் இணைந்து அடுத்தடுத்த படங்களை திட்டமிட்டு வருகிறது.

SCROLL FOR NEXT