சிம்புதேவன் இயக்கியுள்ள படம் ‘நவோரியா’. இதில் விமல், ஆன்ஷீத்தல், ஆரி அர்ஜுனன், தம்பி ராமையா, பால சரவணன், நிழல்கள் ரவி, பாலாஜி சக்திவேல், வடிவுக்கரசி, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ளனர். டி பி சி ட்ரீம் ஹவுஸ் சார்பில் திருக்குமரன் கதிர்வேல் தயாரித்துள்ளார்.
இப்படம் பற்றி சிம்புதேவன் கூறும்போது, “நவோரியா என்பது ஒரு மலையின் பெயர். படத்தில் இந்த மலை முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் அந்த தலைப்பை வைத்துள்ளோம். ஏன் இந்தப் பெயர் என்பது படம் பார்க்கும்போது தெரியும். சென்னையில் இருந்து தென் மாவட்டம் ஒன்றுக்குச் செல்லும் சிலர் எதிர்பாராமல் அங்கு ஒரு விளையாட்டில் மாட்டிக் கொள்கின்றனர்.
அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் படம். இது ஃபேன்டஸி படம். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கி இருக்கிறோம். மிரட்டலான 5 சண்டைக்காட்சிகளும் இருக்கிறது. 30 சதவீதம் கிராபிக்ஸ் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சில காட்சிகளைச் சென்னையில் செட் அமைத்து எடுத்துள்ளோம். இப்படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.