இயக்குநர் பிரபு ராம் | நல்லபடம் போஸ்டர்
மதுவிலக்கு அறிவிக்கப்பட்ட பிறகு நாடு எப்படியிருக்கும் என்பதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம், ‘நல்லபடம்’. சி.பிரபு ராம் இயக்கியுள்ள இப்படத்தில் டாக்டர் ஹரிஷ் நாயகனாகவும் தனலட்சுமி நாயகியாகவும் நடித்துள்ளனர்.
மொட்டை ராஜேந்திரன், கல்கி ராஜா, ரமா, பிரியதர்ஷினி உள்பட பலர் நடித்துள்ள இப்படத்தை ஹரிஷ் சினிமாஸ் சார்பில் அழகு பாண்டியன் தயாரித்துள்ளார்.
சசிகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார்.
செப்.18-ம் தேதி வெளியாகும் இப்படம் பற்றி இயக்குநர் பிரபு ராம் கூறும்போது, “மதுவிலக்கு அறிவித்தால் நாடு எப்படியிருக்கும் என்பதுதான் இதன் கதை.
மக்கள் ஒவ்வொருவரிடமும் போய் ‘திருந்துங்க’ என்று சொல்வதைவிட, அரசு நினைத்தால் ஒரே ஆணையில் மதுவிலக்கைக் கொண்டு வர முடியும். அரசே கொடுத்துவிட்டுக் குடிக்காதீர்கள் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கிறது? என்பதை வைத்து இப்படம் உருவாகி உள்ளது.
மது பழக்கம் கொண்ட நாயகன், நண்பர்களுடன் அதற்கான சங்கம் ஒன்றை ஆரம்பித்து ரகளையாக இருக்கிறார். மது விலக்கு வந்த பிறகு அவர் வாழ்க்கையில், நாட்டில் உள்ள குடும்பங்களிலும் என்ன நடக்கிறது என்பதைச் சொல்கிறோம். நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் மற்றும் சமூகக் கருத்தைக் கொண்ட படமாக உருவாக்கி இருக்கிறோம்” என்றார்.