தமிழ் சினிமா

‘மின்னும் ஓர் இரவு’-க்காக லொகேஷனை தேர்வு செய்ய​ சிரமப்பட்டோம்: இயக்​குநர் தகவல்

நிலா

இனிகோ பிர​பாகர் முதன்மை வேடத்​தில் நடித்​துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ படத்​தில் அஞ்சு கிருஷ்ணா அஷோக், சுப்​பிரமணி​யம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன் உள்​பட பலர் முக்​கிய பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். மருத்​து​வர் பி.ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி.ராபர்ட் புரொடக் ஷன்ஸ் சார்​பில் தயாரித்​துள்ள இப்படத்தை சிவபிரபு செல்​வ​ராஜ் இயக்​கி​யுள்​ளார்.

சுரேஷ்குமார் சுந்​தரம் ஒளிப்​ப​திவு செய்ய, பிரணவ் சூரஜ் இசையமைத்​துள்​ளார். நவ. 27-ல் வெளியாகும் இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்​னை​யில் நடைபெற்றது. படக்​குழு​வினருடன் இயக்​குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் உள்​பட பலர் கலந்து கொண்​டனர்.

இயக்​குநர் சிவபிரபு செல்​வ​ராஜ் கூறும்​போது, “இப்​படத்​தின் கதை முழு​வதும் இர​வில் நடை​பெறுகிறது. இத​னால் படப்​பி​டிப்​புத் தளங்​களைத் தேர்வு செய்​வதில் கடுமையான சவால்​கள் இருந்​தன. நாங்​கள் தேர்வு செய்த கிராமத்​தில் மொத்​தம் 34 குடும்​பங்​கள்​தான் இருந்தன. அதிலும் அந்​தக் குடும்​பங்​களின் வயதானவர்கள் மட்​டுமே அங்கு வசிக்​கிறார்​கள். அவர்​களுக்குத் தொந்​தரவு தராமல் படப்​பி​டிப்பை நடத்த வேண்​டிய சூழல் இருந்​தது. அதை உணர்ந்து படப்​பி​டிப்பை நடத்​தினோம். படத்தை பார்த்தவர்கள் சிறப்​பாக இருப்​ப​தாகச் சொன்​னார்​கள். கண்​டிப்​பாக எல்லோருக்கும் பிடிக்​கும்” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT