தமிழ் சினிமா

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ தெலுங்கு படம் அல்ல: இயக்குநர் தகவல்

நிலா

தமிழ், தெலுங்​கில் வெற்​றி​பெற்ற ‘லக்கி பாஸ்​கர்’ படத்​துக்​குப் பிறகு, வெங்கி அட்​லூரி இயக்​கி​யுள்ள படம் ‘விஸ்​வ​நாத் அண்ட் சன்​ஸ்’. இதில் சூர்​யா, மமிதா பைஜு, ரா​திகா சரத்​கு​மார், ரவீனா டாண்​டன் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர்.

சித்​தாரா என்​டர்​டெ​யின்​மென்ட்​ஸ் தயாரித்​துள்ள இந்​தப் படம், ஆக. 14-ல் வெளி​யாக​வுள்​ளது. படக்​குழு வெளி​யிட்​டுள்ள டீஸர், பாடல்​கள் வரவேற்பை பெற்​றுள்​ளன. இந்​நிலை​யில், சமீபத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பேசிய வெங்கி அட்​லூரி, இது நேரடி தெலுங்​குப் படம் அல்ல; தமிழில் உரு​வாக்​கப்​பட்ட படம் என்​பதை தெளிவுபடுத்தி உள்​ளார்.

அவர் மேலும் கூறும்​போது, “தனுஷுடன் ‘வாத்​தி’ படத்தை உரு​வாக்​கிய​போது அவருக்கு தெலுங்​கிலும் ஏராள​மான ரசிகர்​கள் உரு​வாகி​யிருப்​ப​தால் அதை தமிழ், தெலுங்​கில் ஒரே நேரத்​தில் படமாக்​கினோம். ஆனால், ‘விஸ்​வ​நாத் அண்ட் சன்​ஸ்’ படத்தை தமிழில் முழு​மை​யாகப் படமாக்​கி, பிறகு தெலுங்​கில் டப்​பிங் செய்​தோம். சூர்​யா​வுடன் படம் இயக்​கு​வது நீண்​ட​நாள் கனவு. எதிர்​காலத்​தில் அவருடன் இணைந்து மீண்​டும் படம் இயக்க விரும்​பு​கிறேன்​” என்​றார்​.

SCROLL FOR NEXT