தமிழ் சினிமா

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ உலகம் முழுவதும் ரூ.200+ கோடி வசூல் சாதனை

ப்ரியா

சென்னை: சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் உலக அளவில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. இத்தகவலைப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாகவம்சி தயாரித்துள்ள இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இத்திரைப்படம், கடந்த ஆகஸ்ட் 14 அன்று திரையரங்குகளில் வெளியானது.

திரையரங்குகளில் வெளியான நாள் முதலே தமிழ்நாட்டிலும், குறிப்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களிலும் இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. பாசிட்டிவ் விமர்சனங்கள் காரணமாக தொடர்ந்து இப்படத்துக்கான வசூலும் அதிகரித்தது

இந்த நிலையில் இப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளது. திரையரங்குகளில் படம் தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், வரவிருக்கும் நாட்களில் இதன் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

SCROLL FOR NEXT