ரொமான்டிக் காமெடி கதையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சண்டக்காரி’. ஆர்.மாதேஷ் எழுதி இயக்கியுள்ள இதில் விமல், ஸ்ரேயா ஜோடியாக நடித்துள்ளனர். இதில் சத்யன், பிரபு, கே.ஆர்.விஜயா, புன்னகை பூ கீதா, ரேகா, தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகியுள்ள இப்படத்துக்கு அம்ரீஷ் இசையமைத்துள்ளார். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். “லண்டனில் இயங்கி வரும் முன்னணி சாஃப்ட்வேர் நிறுவனத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை நகர்கிறது.
அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரியான ஸ்ரேயாவுக்கும் அதே நிறுவனத்தில் பணிபுரியும் விமலுக்குமான மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும்தான் கதை. காதல், காமெடி, மோதல், குடும்ப உணர்வுகள் என கலந்து உருவாகியுள்ள இப்படம், ரசிகர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கை அளிக்கும்” என படக்குழு தெரிவித்துள்ளது.