விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் தணிக்கை சான்றிதழ் பிரச்சினையால்வெளியாகவில்லை. இந்தப் படத்தைப் பொங்கலுக்கு வெளியிடும் முயற்சியில், படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
அப்படம் வெளியாகுமா, ஆகாதா என்ற நிலையில், விஜய் நடித்து வெற்றி பெற்ற பழைய திரைப்படங்களை ரீரிலிஸ் செய்ய சில தயாரிப்பாளர்கள் முயன்று வந்தனர்.
இந்நிலையில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான ‘தெறி’ படத்தைப் பொங்கலுக்கு மறுவெளியீடு செய்வதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அறிவித்துள்ளார்.
அட்லி இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, இயக்குநர் மகேந்திரன், ராஜேந்திரன்உள்பட பலர் நடித்தஇப்படம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியானது. இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்திருந்தார். இதை ஜன.14-ம் தேதி மறு வெளியீடு செய்வதாகத் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.