இந்தி நடிகையான வித்யா பாலன், தமிழில் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருந்தார். இப்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அவர் ஆர்.பால்கி இயக்கும் தமிழ்ப் படத்தில் நாயகியாக நடிக்கிறார். சுமார் 17 ஆண்டுகளுக்குப் பிறகு பால்கியுடன் அவர் மீண்டும் இணைந்துள்ளார்.
முன்னதாக கடந்த 2009-ம் ஆண்டு வெளியான ‘பா’ படத்தில் இருவரும் பணியாற்றி இருந்தனர். இந்தப் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாகப் புகைப்படத்துடன் வித்யா பாலன் தெரிவித்துள்ளார். இப்படத்துக்கு இளையராஜா இசை அமைக்கிறார். இது ஒரு பாடகியின் பயோபிக் என்று தெரிகிறது.