தமிழ் சினிமா

‘வீர ராஜா வீரா’ பாடல்: உச்ச நீதிமன்றத்​தில் ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி

ப்ரியா

‘பொன்​னி​யின் செல்​வன்’ 2-ம் பாகம் படத்​தில் இடம்​பெற்ற ‘வீர ராஜா வீரா’ பாடல் விவ​காரத்​தில் இசையமைப்​பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு எதி​ராக இந்​திய பாரம்​பரிய பாடகர் ஃபயஸ் வாசிஃபுதீன் தாகர் பதிப்​புரிமை வழக்கு தொடர்ந்தார்.

அதை விசா​ரித்தடெல்லி உயர் நீதி​மன்​றம், ஏ.ஆர். ரஹ்மானை கடந்த செப்​டம்​பரில் விடு​வித்​தது. இதை எதிர்த்து பாடகர் ஃபயஸ் வாசிஃபுதீன் தாகர் மேல்முறையீடு செய்​தார். அந்த மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி சூர்​ய​காந்த் தலை​மையி​லான அமர்வு நேற்று மீண்​டும் விசா​ரித்​தது.

          

ஏ.ஆர்.ரஹ்மான் சார்​பில் மூத்த வழக்​கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, ‘வீர ராஜா வீரா’ பாடலுக்கு திரை​யில் பாடகர்​கள் ஃபயஸ் வாசிஃபுதீன் தாகர், நசீர் ஜாஹீருதீன் சாகர் பெயர்​களை குறிப்​பிட்டு அனைத்து சமூக வலைத்​தளங்​கள், ஓடிடி தளங்​களில் அங்​கீகரிக்​கப்​படும் என்று உறு​தி​யளித்​தார். அதைப் பதிவு செய்து கொண்ட உச்ச நீதி​மன்​றம், அதற்​காக 5 வார​கால அவகாசம் வழங்​கியது.

இந்த விவ​காரத்​தில் ஏ.ஆர்​.ரஹ்​மானின் 2 கோடி ரூபாய் டெபாசிட், டெல்லி உயர்​நீ​தி​மன்ற தலை​மைப் பதி​வாளார் வசம் இருக்​க​வும், நீதி​மன்​றங்​கள் தெரி​வித்த கருத்​துகளை கணக்​கில் கொள்​ளாமல் சிவில் வழக்கை சுதந்​திர​மாக விசா​ரிக்​க​வும் உத்​தர​விட்டு மேல்​முறை​யீடு மனுவை முடித்து வைத்​தது.

SCROLL FOR NEXT