விழா பட இயக்குநர் பாரதி பாலகுமாரன்
திரைப்படமாகும் அமானுஷ்யம் சார்ந்த உண்மைக் கதை
‘விழா’ படத்தை இயக்கிய பாரதி பாலகுமாரன் அடுத்து இயக்கும் படத்தில் ‘சாம்பியன்’ படம் மூலம் அறிமுகமான விஷ்வா நாயகனாக நடிக்கிறார்.
முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மைம் கோபி, ஆடுகளம் நரேன், ரிஷா ஜாக்கோப்ஸ், முனீஷ்காந்த், அனுபமாகுமார், பாபா பாஸ்கர், ரம்யா சுரேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
1980-களின் மத்தியில், தென் மாவட்டங்களில் ரத்தமும் சதையுமாக அரங்கேறிய ‘அமானுஷ்யம்’ சார்ந்த உண்மைக் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. ‘ஜென்டில்வுமன்’ படத்தை தயாரித்த கோமளா ஹரி பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கோமளா ஹரிபாஸ்கரன் தயாரிக்கிறார்.
“நம் சமூகத்தின் நீண்டகால கலாச்சாரம், பண்பாடு மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் பதிவாக இப்படத்தின் கதை உருவாகி இருக்கிறது. இம்மாதம் 22-ம் தேதி முதல் தொடர்ந்து 40 நாள்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது” என்றது படக்குழு.