தமிழ் சினிமா

“டாம் ஹாங்க்ஸ் பாராட்டியது பெரிய விஷயம்” - விஜய் சேதுபதி மகிழ்ச்சி

நிலா

விஜய் சேதுப​தி​யின் 50-வது திரைப்​பட​மாக வெளியாகி வெற்றி பெற்ற திரைப்​படம், ‘மகாராஜா’. நித்​திலன் சாமிநாதன் இயக்​கிய இப்​படம் ஹாலிவுட்​டில் ரீமேக் ஆக இருக்​கிறது. இந்​தப் படத்​தைப் பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் சமீபத்​தில் பாராட்டியிருந்​தார். குறிப்​பாக அதில் நடித்த சாச்​சனா நமிதாஸின் நடிப்பை மிகவும் பாராட்​டினார்.

இந்​நிலை​யில், அமெரிக்​கா​வின் நியூயார்க் நகரில் நடை​பெற்ற 54-வது சர்​வ​தேச எம்மி விருது விழா​வில், விருது வழங்​குபவ​ராக விஜய் சேதுபதி பங்​கேற்​றார். கடந்த நவ. 23-ம் தேதி நடை​பெற்ற இந்த விழா​வில், உல​கின் பல்​வேறு நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள், இயக்​குநர்​கள் மற்​றும் தொலைக்​காட்​சித் துறையினருடன் அவரும் பங்​கேற்​றார். இந்​நிகழ்ச்​சி​யில் விருது வழங்​கிய முதல் இந்​தி​யர் என்ற பெரு​மையையும் அவர் பெற்​றார். இந்​நிகழ்ச்​சியை முடித்​துக்​கொண்டு அவர், நேற்று முன் தினம் சென்னை திரும்​பினார்.

அப்​போது, டாம் ஹாங்க்ஸ் பாராட்​டியது பற்றி அவரிடம் கேட்கப்பட்​டது. அதற்கு அவர், “எம்மி விருதுக்கு என்னை அழைப்பார்​கள் என நினைக்​க​வில்லை; அதற்​காக மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். டாம் ஹாங்க்ஸ், மகாராஜா படத்​தைப் பார்த்து சாச்​சனா நடிப்​பைப் பாராட்​டினார் என்று அறிந்​ததும் வியப்பு அடைந்​தேன். எங்​கள் தோழி கவிதா, மகாராஜா உள்​பட 3 படத்தை அவருக்​குப் பரிந்​துரைத்​துள்​ளார். அதில் மகாராஜாவை அவர் பார்த்​துள்​ளார். நான் டாம் ஹாங்க்​ஸின் ரசிகன். அவர் நமது படத்​தைப் பார்த்து, பாராட்​டி​யிருப்​பது பெரிய விஷயம்” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT