தமிழ் சினிமா

திரைத் தெறிப்புகள்: சூரியின் மகிழ்ச்சி முதல் அம்பிகா அட்வைஸ் வரை

ப்ரியா

மண்டாடி படத்துக்கான ரஜினியின் பாராட்டால் சூரி பெற்ற மகிழ்ச்சி முதல் த்ரிஷாவுக்கு நடிகை அம்பிகா கொடுத்த அட்வைஸ் வரை இன்றைய திரைத் தெறிப்புகள் இது.

> சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எங்கள் ‘மண்டாடி’ படத்தைப் பார்த்துப் பாராட்டியுள்ளார். அவருடைய இந்த அன்பான அழைப்பு எனக்கும் எங்கள் முழு படக்குழுவுக்கும் மிகப் பெரிய பொக்கிஷம். அவரது குரலைக் கேட்டது விலைமதிப்பற்ற தருணம். அவரது வர்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய ஆசீர்வாதம் என நடிகர் சூரி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

> பிக் பாஸ் 10 சீசனில் வெற்றி வாய்ப்பு உள்ள போட்டியாளர் முனியம்மா தான். இவருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் வினோத்பாபுவும் 3-வது இடத்தில் லட்சுமி பிரியாவும் 4-வது இடத்தில் சாந்தினியும் 5-வது இடத்தில் அடாவடி அன்சரும் இருப்பார்கள் என பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட சவின்யா தெரிவித்துள்ளார்.

> நேரம் அதிகமாகிவிட்டதால் ஓய்வெடுக்கச் செல்ல வேண்டும் என்று வலைதளத்தில் எழுதி இருந்தேன். ஆனால் இந்த ஊடகங்கள் அதைத் தவறாகப் புரிந்துகொண்டன. இல்லை சார், நான் நடிப்பில் இருந்து ஓய்வு பெறவில்லை. ஆங்கிலத்தில், ரிட்டையர் என்றால் தூங்கச் செல்வது என்ற பொருளும் இருக்கிறது என அமிதாப் பச்சன் விளக்கம் அளித்துள்ளார்.

> தனது வாழ்நாள் முழுவதும் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்றே சிந்தித்த பெருமகன் பேரறிஞர் அண்ணா. அவரது சிந்தனைகள், தமிழ்நாட்டின் சமூக மற்றும் அரசியல் வரலாற்றில் ஏற்படுத்திய தாக்கத்தை இந்நாளில் நினைவுகூருவோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

> பிக் பாஸ் நிகழ்ச்சியில் தலைமை குறித்து நடிகர் விஜய் சேதுபதி பேசிய கருத்துகள் சர்ச்சையான நிலையில், “மார்க்கெட் சரிந்ததால் விஜய் சேதுபதி, முதல்வர் விஜய் குறித்து பேசியிருக்கிறார்” என்று தெரிவித்துள்ள சூலூர் தவெக எம்எல்ஏ சுகுமார், “விஜய் சேதுபதி செல்லும் இடங்களில் எல்லாம் முற்றுகையிடுவோம். அவர் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

> ‘நாடோடிகள்’ படத்தின் வெற்றி மூலம் சமுத்திரக்கனி - சசிகுமார் கூட்டணியின் நட்பு பலப்பட்டது. தற்போது, SIIMA 2026 விருது விழாவில், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்திற்காக சசிகுமார் விருது பெற்றுள்ள நிலையில், ‘காந்தா’ படத்திற்காக சமுத்திரக்கனி சிறந்த துணை நடிகர் விருதைப் பெற்றுள்ளார். இந்த நட்புக் கூட்டணி ‘ஸ்கூல் பஸ்’ படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.

> தீபாவளித் திருநாளில் சூர்யாவின் ‘சீன்’, பிரபுதேவாவின் ‘மூன் வாக்’ ஆகிய படங்கள் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பண்டிகை ரிலீஸ் ரேஸில் விஜய்சேதுபதியும் கடைசி நேரத்தில் இணையும் விதமாக தற்போது திரையரங்குகளைப் பங்குபோடும் வேலை நடந்து வருகிறதாம். இதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல், சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள 'மூக்குத்தி அம்மன் 2' படத்தை களமிறக்குவதாக அறிவித்துவிட்டார்கள்.

> எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மாவின் 110-வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது வாழ்க்கையை மையமாகக் கொண்ட பயோபிக் திரைப்படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனிருத் ரவிச்சந்தர் இசையில் எம்.எஸ்ஸாக திரையில் தோன்ற இருப்பவர் ராஷ்மிகா மந்தனா.

> ‘டிசி’ படத்தின் அபாரமான வெற்றிக்குப் பிறகு, அந்தப் படத்தின் இயக்குநர், நாயகன் உள்ளிட்டவர்களுக்கு அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கியது. ஆனால், படத்தின் வெற்றியில் ‘சந்திரா’வாக நடித்த வாமிகா கபியை கார் பரிசு விஷயத்தில் கண்டுகொள்ளமால் விட்டதை அவரது ரசிகர்கள் இணையத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.

> லண்டன் சென்றது குறித்தோ, ஒரே மாதிரியான உடை அணிவது குறித்தோ எழும் விமர்சனங்களை பொறுத்தவரை, த்ரிஷாவின் இடத்தில் நான் இருந்திருந்தால், எதிர்மறை விமர்சனம் வரும் என்றால், உடன் செல்வதை தவிர்ப்பேன். இது என்னுடைய கருத்து. நட்புக்கு மதிப்பு கொடுத்து நாமும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என நடிகை அம்பிகா கருத்து தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT