கொண்டாட்டத்துக்கு முந்தைய குதூகலமாய் தீபாவளி வெளியீட்டுக்கு முன்பாக இந்த வாரம் திரைக்கு வர இருக்கும் படங்களின் பட்டியல் இது.
சிங்காரம்: யோகி பாபு நடிப்பில் கே.வி.கதிர்வேலு இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சிங்காரம்’. இதில் யோகி பாபுவுடன், வேல ராமமூர்த்தி, படவா கோபி, சென்ட்ராயன், ஜாவா சுந்தரேசன், சபிதா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டப்பேரவை உறுப்பினராக உயர்வதை மையமாகக் கொண்ட இந்த தமிழ் மொழி படம் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது.
எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்: இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரியான தோ.சமய முரளி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’. இந்தப் படத்தில் ஜே.டி.சக்கரவர்த்தி, லால், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேகா, ராதிகா சரத்குமார், காளி வெங்கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
கடத்தல் உலகம் மற்றும் சுங்கத் துறையின் மறுபக்கம் குறித்து பேசும் இந்த க்ரைம் த்ரில்லர் தமிழ் படம் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது.
புலவர்: மறைந்த இயக்குநர் பாரதிராஜா முதன்மை கதாபாத்திரத்தில் கடைசியாக நடித்த படம் ‘புலவர்’. முருகைய்யா இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் பாரதிராஜாவுடன் ரேச்சல் ரெபக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன், வெற்றிவேல் ராஜா, பூபாலம் செந்தில், சப்ளின் சுந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர், பெண் ஒருவரின் கொலை வழக்கை விசாரிக்கிறார். அவர் குற்றவாளிகளை எவ்வாறு கையாளுகிறார் என்பதை டார்க் காமெடியாக சொல்லும் இந்தப் படம் அக்டோபர் 30 அன்று வெளியாக இருக்கிறது.
ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47: வெங்கடேஷ் டகுபதி நடிப்பில் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர்: 47’. இந்தப் படத்தில் வெங்கடேஷுடன் ஸ்ரீநிதி ஷெட்டி, நாரா ரோஹித், நிவேதிதா பெத்துராஜ், யுவினா பார்த்தவி, ராஜா ப்ரஜ்வால், ராவ் ரமேஷ், சத்யாம் பிரம்மாஜி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அமைதியான, அழகான வாழ்க்கை நடத்தி வரும் குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவத்தால் ஏற்படும் திருப்பங்களை பற்றிப் பேசும் இந்த தெலுங்கு படம் அக்டோபர் 30 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
கல்ட்: விஸ்வக் சென் இயக்கி நடித்திருக்கும் படம் ‘கல்ட்’. இதில் அவருடன் காயத்ரி பரத்வாஜ், தாரக் பொன்னப்பா, முரளி ஷர்மா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், கார்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த ஹாரர், சைக்கலாஜிகல் த்ரில்லர் தெலுங்கு படம் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது.
விக்கர்: அலெக்ஸ் ஹஸ்டன் ஃபிச்சர் மற்றும் எலினோர் வில்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ஆங்கிலப் படம் ‘விக்கர்’. இந்தப் படத்தில் ஒலிவியா கோல்மேன், அலெக்ஸாண்டர் ஸ்கார்ஸ்கார்ட், பீட்டர் டிங்கிலேஜ், எலிசபெத் டெபிகி உள்ளிடோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது.
சந்திரஹாசா: ஆனந்த் ஷிவப்பா கலகபன்டி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சந்திரஹாசா’. இந்தப் படத்தில் ஹரிஷ் ஹிரியூர், சாயாஸ்ரீ உமேஷ், நிங்கராஜூ மாண்டியா, சந்தோஷ் கேரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தக் கன்னடப் படம் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது.