தமிழ் சினிமா

‘ஓ.ம்’ முதல் ‘அப்பா குட்டி’ வரை: இந்த வாரம் தியேட்டர் ரிலீஸ் பட்டியல்

ப்ரியா

கொண்டாட்ட வெள்ளம் வடியும் வரை காத்திருந்து சினிமா ரசிகர்களின் ரசனைக்கு விருந்து வைக்க இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் திரைப்படங்களின் பட்டியல் இது.

ஓ.ம்: ஆபரேஷன் மோல்: தனுஷ் - மம்மூட்டி கூட்டணியில் உருவாகி இருக்கும் படம் ‘ஓ.ம்: ஆபரேஷன் மோல்’. ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில், சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா, இந்​திரன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். செம்மரக் கடத்தல் குற்றப் பின்னணியை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் இந்தப் படம் நவம்பர் 20 அன்று வெளியாக இருக்கிறது.

சத்தியவான் சாவித்திரி: அறிமுக இயக்குநர் பிரவீன் எஸ் விஜய் இயக்கி இருக்கும் படம் ‘சத்தியவான் சாவித்திரி’. மிஷ்கின், கீர்த்தி சுரேஷ் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் சாருகேஷ், பாலசரவணன், ஷில்பா மஞ்சுநாத், மதுசூதனன், ஆர்.சுந்தரராஜன், பிரிகிடா, மாலா பார்வதி, ஏ.வெங்கடேஷ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

ஜீ ஸ்டுடியோஸுடன் இணைந்து, டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு, சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். 

கொலை குற்றம் சாட்டப்பட்ட கணவனைக் காப்பாற்ற தனது சீனியரை எதிர்த்து மனைவி களமிறங்கி வாதாடும் இந்தப் படம் நவம்பர் 20 அன்று வெளியாக இருக்கிறது.

அப்பா குட்டி: மு.மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘அப்பா குட்டி’. இதில் விஜய் ஆண்டனியுடன், பிரீத்தி அஸ்​ராணி, பேபி லிதன்​யா, பகவதி பெருமாள், ஹரிப்​பிரி​யா, அருவி மதன், சித்ரா லட்​சுமணன் உள்ளிட்ட பலர் முக்​கியக் கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். 

விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இப்படத்துக்கு இசையும் அவரே. மகளுக்காக வாழத்துடிக்கும் ஓர் அப்பா பற்றி பேசும் இந்தப் படம் நவம்பர் 20 அன்று வெளியாக இருக்கிறது.

சங்கராபரணம்: சுமந்த் பட்  இயக்கத்தில் உருவாகி இருக்கும் கன்னடப் படம் ‘சங்கராபரணம்’. இந்தப் படத்தில் ஷைன் ஷெட்டி, தன்வி ராம், சம்பத் ராஜ், தீபக் ராஜ் பாஞ்சே உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் சீனாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.

ஒரு பேருந்து ஓட்டுநரின் பயணத்தில் அவர் சந்திக்கும் அமானுஷ்யாமான விஷயங்களையும், தெரிந்து கொள்ளும் உண்மைகளையும் பேசும் இந்த நகைச்சுவை திகில் படம் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இஎன்இ ரிப்பீட்: தருண் பாஸ்கர் தாஸ்யம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் தெலுங்கு படம் ‘இஎன்இ ரிப்பீட்’. இந்தப் படத்தில் விஸ்வக் சென், அபினவ் கோமடம், வெங்கடேஷ் ககுமானு, ஸ்ரீநாத் மகாநதி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

பழைய நண்பர்கள் ஒன்றிணைந்து ஒரு படத்தை உருவாக்கும் போது ஏற்படும் திருப்பங்களை நகைச்சுவையாக சொல்கிறது இந்தப் படம். ‘ஈ நகரானிகி ஏமைந்தி’ படத்தின் இரண்டாவது பாகமாக வரும் இப்படம் நவம்பர் 19 அன்று வெளியாக உள்ளது.

பிருந்தா விஹாரி: ஸ்ரீவாஸ் ராஜூ இயக்கத்தில் உருவாகி இருக்கும் கன்னடப் படம் ‘பிருந்தா விஹாரி’. இப்படத்தில், கணேஷ், தேவிகா பட், மாளவிகா ஷர்மா, ராம்குமார், ரங்காயண ரகு, லக்ஷ்மி, அச்யுத் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த காதல் கதை முதலில் அக்டோபர்  16-ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது நவம்பர் 20 அன்று வெளியாகிறது.  

கெரூப்: முன்தமல்லா ஜீவன் நாயுடு இயக்கத்தில் உருவாகி இருக்கும் தெலுங்கு படம் ‘கெரூப்’. இந்தப் படத்தில், விஹான் கார்த்திக், திவ்யா விஷ்வகர்மா நடித்திருக்கிறார்கள். காட்டின் பின்னணியில் மூன்று காலங்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த ஃபேண்டசி படம் நவம்பர் 20 அன்று வெளியாக  இருக்கிறது.

ஆகாசம்லோ ஒக தாரா: பவன் சதினேனி இயக்கத்தில் உருவாகி இருக்கும் தெலுங்கு படம் ‘ஆகாசம்லோ ஒக தாரா’. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், சாத்​விகா, ஸ்ருதி ஹாசன், ருஹானி சர்மா, ஸ்வாசிகா, கவுதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விண்​வெளி வீராங்​கனையாக வேண்டும் என்கிற குக்கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஆசையைப் பற்றி பேசும் இந்தப் படம் நவம்பர் 20 அன்று வெளியாகிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT