இசை அமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், திருவாசகத்தை முழுமையான இசை ஆல்பமாக உருவாக்க முடிவு செய்துள்ளார். அதன் முதல் படியாகத் திருவாசகத்தின் முதல் பாடலுக்கு இசை அமைத்து, பாடி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். இந்தப் பாடலின் ஒரு பகுதியை, டெல்லியில் சமீபத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி முன்னிலையில் ஜி.வி.பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக வழங்கியிருந்தார்.
“பாரம்பரிய ஆன்மிக இலக்கியத்தை இன்றைய தலைமுறைக்கு எளிதாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன், இசை வடிவமைப்பில் நவீன ஒலியமைப்பையும், பாரம்பரிய பக்தி சுவையையும் நுட்பமாக இப்பாடலில் ஜி.வி.பிரகாஷ் இணைத்துள்ளார்” என்று அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பாடல் இணையத்தில் வரவேற்பைப் பெற்று வருகிறது.