ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் இயக்கிய ‘காகித மலர்’ திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் ஏசியன் பியூச்சர் பிரிவில் திரையிடப்பட்டது. இதில் படத்தின் தயாரிப்பாளரான பிரேமா செழியன், அவரது மகள் செல்வி அதிதா செழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
படத்தை ஆர்வத்துடன் கண்டு ரசித்த ஜப்பானிய ரசிகர்கள், படம் நிறைவடைந்ததும் பலத்த கைதட்டல்களுடன் பாராட்டினர். திரையிடலுக்குப் பின்னர் நடைபெற்ற கேள்வி-பதில் நிகழ்ச்சியில் பிரேமா செழியனும் அதிதா செழியனும் பதிலளித்தனர். இத்திரைப்படம் பல்வேறு நாடுகளின் பட விழாக்களில் திரையிடப்பட இருக்கிறது.