தமிழ் சினிமா

சுவாமி ஐயப்பனின் மகிமையை சொல்​லும் ‘தத் த்வம் அஸி’, ‘ஆர்ய கேரள வர்மன்’

செய்திப்பிரிவு

வெங்​கட் பிரபு இயக்​கிய சென்னை 28, சென்னை 28-2 ஆகிய திரைப்படங்​களை இணைத் தயாரிப்பு செய்த கேஜே சரவணா, தனது தந்த்ரா பிலிம்ஸ் சார்​பில், சுவாமி ஐயப்பனின் மகிமையை சொல்​லும் 2 திரைப்படங்​களைத் தயாரிக்​கிறார்.

இந்​தப் படங்​களின் தலைப்​பு​களான ‘தத் த்வம் அஸி’, ‘ஆர்ய கேரள வர்​மன்’ ஆகிய​வற்றை வெங்​கட் பிரபு வெளியிட்​டார். ஐயப்ப பக்​தரின் வாழ்க்​கை, அவரது நம்பிக்​கை, பக்தி மற்​றும் ஆன்​மீக பயணத்தை மையமாகக் கொண்டு ஆன்​மீக ஆக் ஷன் படமாக, ‘தத்த்வம் அஸி’ உரு​வாகிறது.

          

இதை, ‘மாளிகாப்புரம்’ படத்தை இயக்​கிய விஷ்ணு சசி சங்கர் இயக்​கு​கிறார். வரலாற்​றுப் பின்​னணி​யில் உருவாகும் ‘ஆர்ய கேரள வர்​மன்’ திரைப்​படம் இது​வரை அதி​கம் பேசப்​ப​டாத சுவாமி ஐயப்​பனின் சுயசரிதை கதையை கொண்​டது.

16-ம் நூற்​றாண்​டின் வரலாற்​றுப் பின்​னணி​யில், அவரது வீரத்​தை​யும் ஆன்​மீகத் தத்​து​வத்​தை​யும் மைய​மாகக் கொண்டு உரு​வாகிறது. இதை ஜேகே சரவணா, ஆதித்யா தங்​கி​ராலா இணைந்து இயக்​கு​கின்​றனர். ஆன்​மீகம், வீரம், பண்​பாடு ஆகியவை இணை​யும் சக்​தி​வாய்ந்த காட்​சிப் படைப்​பாக இது உரு​வாக இருக்​கிறது. இந்த 2 படங்​களும் பான் இந்​தியா முறை​யில் பல்​வேறு மொழிகளில் வெளி​யாக இருக்​கின்றன.

SCROLL FOR NEXT