தமிழ் சினிமா

சுங்கத் துறை​​யின் மறுபக்​கம் பேசும் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’

நிலா

ஜே.டி.சக்​கர​வர்த்​தி, லால், சரண் சக்​தி, பால சரவணன், ஸ்மே​கா, ராதிகா சரத்​கு​மார், காளி வெங்​கட், ஜாஃபர் சாதிக், மைம் கோபி உள்​ளிட்​டோர் நடிக்​கும் படம் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’. கடத்​தல் உலகம் மற்​றும் சுங்கத்துறை​யின் மறு​பக்​கம் குறித்து பேசும் இந்த க்ரைம் த்ரில்​லர் படத்​தை, இந்​திய வரு​வாய் பணி (ஐஆர்​எஸ்) அதி​காரி​யான தோ.சமய முரளி எழுதி இயக்​கி​யுள்​ளார்.

எஸ்​.ஆர். ட்ரீம் ஸ்டூடியோஸ் சார்​பில் எஸ். ராம் பிர​காஷ் தயாரித்​துள்ள இப்​படம் பற்றி தோ.சமய முரளி கூறும்​போது, “நான் விசா​ரித்த பல சுங்​கத்​துறை வழக்​கு​களை அடிப்​படை​யாகக் கொண்ட கற்​பனைக் கதை​தான் இப்​படம். கடத்​தல், நிழல் உலகம் மற்​றும் சுங்​கத்​துறை​யின் செயல்​பாடு​களை சுவாரஸிய​மான சினிமா மொழி​யில் மக்​களிடம் கொண்டு சேர்ப்​ப​தோடு, நாட்​டின் பொருளா​தா​ரப் பாது​காப்பு மற்​றும் குற்​றத்​தடுப்பு வேலை​யில் சுங்​கத்​துறை வகிக்​கும் முக்​கியப் பங்​கைப் பற்​றிய விழிப்​புணர்​வை​யும் ஏற்​படுத்த வேண்​டும் என்​பதே இந்​தப் படத்​தின் நோக்​கம். ரசிகர்​கள் இந்​தப் படத்தை வரவேற்​பார்​கள் என்று நம்​பு​கிறேன்” என்​றார்.

மூத்த ஐஆர்​எஸ் அதி​காரியான தோ.சமய முரளி, ‘சுங்​கம்: தி ஹெரிடேஜ் ஆஃப் சென்னை கஸ்​டம்ஸ்’, ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்​ளர்’, ‘காக்​கி’ உள்​ளிட்ட நூல்​களையும் எழு​தி​யுள்​ளார். அவர் எழு​திய சுங்​கத்​துறை தொடர்​பான 2 ஆய்​வுக் கட்​டுரைகள் ‘வேர்ல்டு கஸ்​டம்​ஸ் ஜர்​னலில்’ வெளி​யாகி​யுள்​ளன. அவர் இயக்​கிய முதல் குறும்​பட​மான ‘பு​திய பார்​வை’, மும்​பை சர்​வ​தேச பட விழா​வில்​ திரை​யிடப்​பட்​டது. ‘சைலன்ட்​’ எனும்​ திரைப்​படத்​தில்​ நடித்​துள்​ள அவர்​ அதற்​கு இசையும் அமைத்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT