தமிழ் சினிமா

22 பிறமொழிச் சொற்களுக்கான தமிழ் வார்த்தைகள் அறிவிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பு​தி​தாக புழக்​கத்​தில் உள்ள 22 பிறமொழிச் சொற்களுக்​கான தமிழ் வார்த்​தைகளை தமிழ் வளர்ச்​சிக் கழகம் வெளியிட்டுள்​ளது.

இது குறித்து தமிழ் வளர்ச்​சிக் கழகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: புதி​தாக புழக்​கத்​துக்கு வரும் ஆங்​கிலம் மற்​றும் பிறமொழிச் சொற்​களுக்கு இணை​யான தூய தமிழ்ச் சொற்​களை உரு​வாக்கி பொது ​மக்​களுக்கு வழங்​கு​வதற்​காக `சொல் புதிது' எனும் திட்​டம் தொடங்​கப்​பட்​டது. இதன் 14-வது கூட்​டம் சென்​னை​யில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது.

கூட்டத்துக்கு தமிழ் வளர்ச்​சிக் கழக தலை​வர் ம.ராசேந்​திரன் தலைமை வகித்​தார். இ​தில் பேராசிரியர்​கள் மு.ராமசாமி, இளங்கோவன், தி.கமலி உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர். இதில் 22 பிற மொழிச் சொற்​களுக்​கான தமிழ் வார்த்​தைகள் முடிவு செய்யப்​பட்​டன.

அதன்​படி, வெஜிடேரியன் ஹோட்டல் - காய்கறி உணவகம், நான் வெஜிடேரியன் ஹோட்டல் - மீன்கறி உணவகம், பைக் ரைடு - உந்துருளிப் பயணம், பைக் டூர் - உந்துருளி உலா, பைக் டாக்ஸி- வாடகை உந்துருளி, ஹேண்ட் பேண்டு - கைப்பட்டை, கம்யூனிட்டி வில்லா பிளாட் - சமூகச் சீர்மனை, டி லிமிடேஷன் - மறு வரையறை, டிஜிட்டல் ஹப் - மின்னணு இணைய மையம், ப்ரீ பையோட்டிக் - நன்னுயிரூட்டி, ரிவ்யூ ஆப் ரிலேட்டட் லிட்ரேச்சர் - முன் ஆய்வுப் பார்வை, சென்ஸ் ஆப் செர்னிடி - ஆழ்மன அமைதி,

யுனிக் பேமெண்ட் இன்டர்பேஸ் (யுபிஐ) - தனித்த பணம் வழங்கிடை முகம், பெரி அர்பன்- புறநகர், ஸ்டேண்ட் அப் காமெடி - தனி நபர் நகைச்சுவை, பிளாக் காமெடி - கருங்கூத்து நகை, ஸ்கெட்ச் காமெடி- சித்திரக் குறுநகை, சர்ரியல் காமெடி- இயல் மிகை நகை, கிரிஞ்ச் காமெடி- கடி நகை, ப்ரீ பயோட்டிக் அட்மாஸ்ப்பியர்- உயிர் முன்வளி மண்டலம், பப் - மயக்க மையம் ஆகிய பிற மொழி சொற்​களுக்​கான வார்த்​தைகள் வெளியிடப்பட்டுள்​ளன. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT