‘கருப்பு’ படத்தின் வெற்றிக்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம், ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’. தனுஷ் நடித்த ‘வாத்தி’, துல்கர் சல்மான் நடித்த ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இப்படத்தை இயக்கியுள்ளார்.
மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இப்படத்தின் டீஸர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. தமிழ், தெலுங்கில் வெளியாகும் இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஆக.14-ம் தேதி இப்படம் வெளியாகிறது. தமிழ்நாட்டில் திங்க் ஸ்டூடியோஸ் இப்படத்தை வெளியிடுகிறது.