தமிழ் சினிமா

சூப்பர் நேச்சுரல் த்ரில்லர் கதையில் ‘தாயன்’

நிலா

சூப்​பர் நேச்​சுரல் மிஸ்டரி த்​ரில்​லராக உரு​வாகி​யுள்ள திரைப்​படம் ‘தாயன்’. புது​முகங்​களான யூரி பிலிப்​போவ், சதீஷ்குமார் குளமந்தை, அலெக்​செய் ஷெவ்​சென்கோ, நெய்​லியா, இம்​மானுவேல், ஜாவித் அப்​பாஸ், செர்​கெய், நிவாஷ் ஆகியோ​ருடன் ‘எதிர்​நீச்​சல்’ ராதிகா வைரவேல​வன் முக்​கிய கதாபாத்​திரத்​தில் நடித்​துள்​ளார்.

இளை​யராஜா இசையமைக்​கிறார். ஸ்​காஸ்கா ஃபிலிம் கிரியேஷன்ஸ் சார்​பில் டாடி​யானா பேபன்கோ மற்​றும் பிரக் ஷை பாபு ஆகியோர் தயாரித்​துள்ள இப்​படத்தை பா.சதாம் இயக்​கி​யுள்​ளார்.

அவர் கூறும்​போது, ‘‘தாயன் என்​பதை சக்​தி​களை உருச் செய்த ஒரு​வன் என்று அர்த்​தப்​படுத்​திக் கொள்​ளலாம். சூப்​பர் நேச்​சுரல் மிஸ்டரி த்​ரில்​லரை ரசிப்​பவர்​களுக்கு இப்​படம் நிச்​சயம் விருந்து படைக்​கும். ஹாலிவுட் படங்​களில் வெவ்​வேறு நாட்​டைச் சேர்ந்த பல நடிகர்​கள் ஒன்​றாக பங்​கேற்​றிருப்​பார்​கள்.

நாங்​களும் இப்​படத்தை ஆரம்​பிக்​கும் போதே அதே ஐடி​யா​வுடன் தான் ஆரம்​பித்​தோம். இதில் ரஷ்யா, சீனா, ஜிம்​பாப்​வேயைச் சேர்ந்த நடிகர்​கள் நடித்​துள்​ளனர். இதன் இறுதிக்​கட்​டப் பணிகள் நடந்து வரு​கின்றன. விரைவில் திரைக்கு வரும்” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT