‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்குப் பிறகு சுந்தர்.சி, இயக்குநர் வி.இஸட் துரை மீண்டும் இணையும் படத்தை மொமண்ட் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.ஏ.ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கின்றனர்.
‘மோ’, ‘மாயோன்’, ‘மெட்ராஸ் மேட்னி’, படங்களுக்குப் பிறகு இப்படத்தை இந்நிறுவனம் தயாரிக்கிறது. ‘பகவந்த் கேசரி’, ‘அகண்டா’, ‘அகண்டா 2’ உள்ளிட்ட தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி.ராம் பிரசாத் ஒளிப்பதிவு செய்கிறார்.
“திகில் நிறைந்த பேய் படமாக உருவாகும் இதன் படப்பிடிப்பு மே மாதம் தொடங்க இருக்கிறது. படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்” என்று தயாரிப்பாளர் ஹரிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
நடிகர் சுந்தர்.சி, ‘அரண்மனை’ வரிசை படங்களில் ஏற்கெனவே பேய்க் கதையில் நடித்திருக்கிறார். இதில் மீண்டும் அதுபோன்ற கதையில் நடிக்க இருக்கிறார்.