தமிழ் சினிமா

‘இயக்கம்தான் என் பலம்!’ - சுந்தர்.சி

செய்திப்பிரிவு

‘அரண்மனை’ படத்தின் நான்கு பாகங்களையும் ‘பிளாக்பஸ்டர்’ வெற்றிகளாகக் கொடுத்தவர் சுந்தர்.சி. இன்னொரு பக்கம் ஆக்‌ஷன் நாயகனாகவும் தன் இருப்பைக் காட்டிவந்தார்.

ஆனால், தற்போது நடிப்பை இரண்டாம் இடத்துக்குத் தள்ளிவிட்டு, இயக்கத்துக்கு முதலிடம் கொடுத்திருப்பது பற்றி அவரிடம் கேட்டபோது, “‘பொதுவாக அரண்மனை’, ‘மூக்குத்தி அம்மன்’ மாதிரி பெரிய படங்களை எடுத்து முடித்தபிறகு, ‘போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளுக்கு அதிக நாள்கள் தேவைப்படும். ’அரண்மனை 4’, ‘மூக்குத்தி அம்மன் 2’ ஆகிய இரண்டு படங்களுக்குத் தலா ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டன.

அந்த இடைவெளியில் நான் வேறு படங்களை இயக்க முடியாது. அந்த இடைவெளியில் நான் நடிக்க வேண்டும் என்று என்னைத் தேடி வருகிற கதைகளில், பிடித்திருந்தால் நடிக்கிறேன். அவ்வளவுதான்.

அப்படி சமீபத்தில் நடித்து முடித்துள்ள ஒரு படத்தைப் பற்றித் தயாரிப்பு நிறுவனமே விரைவில் அறிவிக்கும்” என்கிறார். தன்னுடைய கனவுப் படம் என்று ‘சங்கமித்ரா’வைக் குறிப்பிடும் சுந்தர். சி, அதை எடுத்து முடிக்க மட்டும் குறைந்தது 2 ஆண்டுகள் தேவைப்படும் என்கிறார். அதற்கான முன் தயாரிப்புப் பணிகளை முடித்துவிட்டதையும் உறுதி செய்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT