விஜய் ஆண்டனி, பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ள திரைப்படம், ‘அப்பா குட்டி’. பேபி லிதன்யா, பகவதி பெருமாள், ஹரிப்பிரியா, அருவி மதன், சித்ரா லட்சுமணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘கண்ணை நம்பாதே’, ‘பிளாக்மெயில்’ படங்களை இயக்கிய மு.மாறன் இயக்கியுள்ள இப்படத்துக்கு ராஜீவ் ரவீந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
“அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான ஆழமான பாசமும், அவர்களுக்குள் இருக்கும் வலுவான உறவும்தான் இந்தப் படத்தின் கதை. விஜய் ஆண்டனி இந்தப் படத்தில் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரத்திலும் ஆக் ஷன் காட்சிகளிலும் நடித்துள்ளார். குடும்ப பாசம், உணர்ச்சிகள், விறுவிறுப்பான காட்சிகள் என அனைத்து தரப்பினருக்கும் பிடிக்கும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. அக். 16-ம் தேதி வெளியாகிறது” என்றார்.