அனிருத் - காவ்யா திருமணத்துக்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கிரீஸில் வலம் வந்த புகைப்படங்களை அவரது மகள் சவுந்தர்யா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ரஜினியின் இளைய மகளும், தயாரிப்பாளருமான சவுந்தர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், ‘என்ன ஓர் அற்புதமான நினைவுகளை ஏதென்ஸில் நாங்கள் உருவாக்கியிருக்கிறோம். இந்த அருமையான குடும்ப பயணத்தின் ஒவ்வொரு தருணத்தையும் அனுபவித்து மகிழ்கிறேன்’ என்று தெரிவித்து உள்ளார்.
அவர் பகிர்ந்துள்ள படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஏதென்ஸ் நகரின் வீதி ஒன்றில் மனைவி லதா, மகள்கள், பேரன்களுடன் கைகோத்தபடி மகிழ்ச்சியாக நடந்து செல்கிறார்.
இந்தப் புகைப்படங்கள் பகிர்ந்த சிறிது நேரத்தில் இணையத்தில் அவை வைரலானது. இந்தப் படங்களுக்கு எதிர்வினையாற்றி உள்ள நடிகை ராக்ஷி கண்ணா, ‘மிகவும் அழகு’ என பதிவிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன், இசையமைப்பாளர் அனிருத் – காவ்யா திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் க்ரீஸ் கிளம்பிச் சென்றார். இவர்களது திருமணம் க்ரீஸில் வைத்து நவம்பர் 11 அன்று நடந்தது.
இதேபோல் காவ்யா மாறனின் சகோதரரான கரண் தயாநிதி மாறன், காவ்யாவின் திருமணத்தின் போது ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.