தமிழ் சினிமா

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ 2-ம் கட்ட படப்பிடிப்பு நிறைவு

ப்ரியா

ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

படப்பிடிப்பு நிறைவடைந்தது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘வீரத்தின் வெற்றிப் பயணத்தில் இரண்டாம் கட்டம் நிறைவு’ என்று தெரிவித்துள்ளது.

இத்துடன் 37 விநாடிகள் ஓடக்கூடிய கிளிம்ஸ் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் சில காட்சிகளும், படப்படிப்பு காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றன.

‘தாய் கிழவி’ இயக்குநர் சிவகுமார் முருகேசனுடன் இயக்கத்தில் சிவகார்த்திக்கேயன் நடித்து வரும் படம், ‘சேயோன்’. ராஜ்கமல் பிலிம்ஸ், டர்மரிக் மீடியா சார்பில் கமல்ஹாசன், மகேந்திரன் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தில் பாக்ய ஸ்ரீ போஸ், பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். 

இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி தொடங்கியது. சுமார் ஒரு மாத காலம் திட்டமிடப்பட்டு  மதுரை அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது படப்பிடிப்பு நிறைவடைந்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

SCROLL FOR NEXT