தமிழ் சினிமா

‘சிறை’ இயக்குநருக்கு தயாரிப்பாளர் கார் பரிசு

செய்திப்பிரிவு

விக்ரம் பிரபு, புதுமுகம் அக்‌ஷய் குமார், அனிஷ்மா, ஆனந்தா உள்பட பலர் நடித்துள்ள படம், ‘சிறை’. ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ், இதன் கதையை எழுதியுள்ளார்.

வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இப்படம் நாளை (டிச.25) வெளியாகிறது. இதன் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ எஸ்.எஸ்.லலித் குமார், இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரிக்கு கார் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.

இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி பேசும்போது, “இது உண்மையான மனிதர்களைப் பற்றிய படம். ஒரு படைப்பு அதற்குத் தேவையானதை அதுவே எடுத்துக்கொள்ளும் என்பார்கள். இப்படத்திலும் அது தான் நடந்தது. தயாரிப்பாளர் லலித் சார், வெற்றிமாறன் அசிஸ்டென்ட் என்றால் ஓகே என்றார். அவர் நம்பிக்கையைக் காப்பாற்றி விட்டேன் என நம்புகிறேன்.

ஒவ்வொரு டெக்னீஷியனும் அவரவர் வேலையை வெகு அர்ப்பணிப்புடன் செய்துள்ளார்கள். இக்கதாபாத்திரத்துக்காக விக்ரம் பிரபு உடலை ஏற்றி, மெச்சூர்டான ஏட்டாக அற்புதமாக நடித்தார். அக்‌ஷய் கதைக்குள் வந்து, இக் கதாபாத்திரத்துக்காக மிக கடினமாக உழைத்தார். நான் வீட்டில் இருந்ததை விட வெற்றி மாறன் சாருடன் இருந்ததுதான் அதிகம். இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, அருண் விஸ்வா, சுரேஷ் காமாட்சி, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, இயக்குநர்கள் ஆர்.கே.செல்வமணி, வெற்றிமாறன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT