பிரபல பின்னணி பாடகியான சின்மயி, தமிழ், தெலுங்கு, இந்தியில் பாடிவருகிறார். மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வெளியான ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் ’ ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான இவர், ஏராளமான ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.
இவர் இப்போது சென்னை தேனாம்பேட்டையில் ‘ஐஜென் கிளினிக்ஸ்’ என்ற பெயரில் பல்நோக்கு மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார். இதை பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் திறந்து வைத்தார்.