‘தி ஒடிசி’ தந்த அரிதான திரை அனுபவம் - அட்லி பகிர்வு

‘தி ஒடிசி’ தந்த அரிதான திரை அனுபவம் - அட்லி பகிர்வு
Updated on
1 min read

‘சில படங்கள் வாழ்ந்து உணரப்படுவதற்கானது. ‘தி ஒடிசி’ படம் சினிமாவைக் கடந்த ஓர் அனுபவம்’ என்று இயக்குநர் அட்லி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அட்லி தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ‘சில படங்களை நீங்கள் பார்க்கலாம், சில படங்களை நீங்கள் வியக்கலாம், வெகு சில படங்கள் மட்டுமே உங்களை முற்றிலும் வேறு உலகத்துக்கு அழைத்துச் செல்லும். ‘தி ஒடிசி’ எனக்கு அதைச் செய்தது.

நோலனின் கதை சொல்லல் வியக்க வைத்தது. படத்தின் காட்சிகள் அதற்குரிய சொந்த மொழிகளை பேசுகின்றன. ஒளிப்பதிவு கதை சொல்லும் ஒரு கதாபாத்திராமாக உணரச் செய்கிறது. லுட்விக்-கின் இசை படத்துக்கு பக்கத்துணையாக இருப்பதுடன் உங்களின் இதயத் துடிப்புடனும் கலக்கிறது.

இப்படியான ஓர் உணர்வை நான் திரையரங்கினுள் வெகு அரிதாகவே உணர்ந்திருக்கிறேன். ஆனால் எனக்குள் பதிந்துபோன ஒரு தனிப்பட்ட விஷயம் என்னவென்றால், ஒரு படைப்புக்கு முன்னால் பார்வையாளர் தன்னை முழுமையாக அர்ப்பணிக்கும்போது அந்தப் படைப்பு ஓர் உண்மையான காவியமாகிறது. ‘தி ஒடிசி’ எனக்கு அப்படி ஓர் அனுபவமாக இருந்தது.

ஐமேக்ஸில் அந்தப் படத்தைப் பாருங்கள். படம் உங்களை ஆக்கிரமிக்கட்டும். அது உங்களை வேறு ஒரு உலகத்துக்கு அழைத்துச் செல்லட்டும். சில படங்கள் பார்ப்பதற்கு மட்டும்... சில படங்கள் வாழ்ந்து உணர்வதற்கானது’ என்று  உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளார்.

கிறிஸ்​டோபர் நோலன் இயக்​கத்​தில் வெளி​யாகி வசூல் சாதனை படைத்து வரும் படம், ‘தி ஒடிசி’. ஹோமரின் புகழ்​பெற்ற கிரேக்​கக் காவிய​மான ‘தி ஒடிசி’யை மைய​மாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள இப்​படத்​தில் மேட் டாமன், டாம் ஹாலண்ட், ஆன் ஹாத்​வே, ஜெண்​டயா ஆகியோர் முக்கிய வேடங்​களில் நடித்​துள்​ளனர். இந்தப் படம் உலக் அளவில் வசூலில் சாதனை படைத்து வருகிறது.

‘தி ஒடிசி’ தந்த அரிதான திரை அனுபவம் - அட்லி பகிர்வு
அட்லி - அல்லு அர்ஜுனின் ‘ராக்கா’வில் வில் ஸ்மித்?

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in