வெற்றிமாறன் – சிம்பு இணையும் ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கப்பட்டுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் சிம்பு, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் பங்குபெறும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு 20 நாட்கள் நடைபெறும் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து சென்னையில் அமைக்கப்பட்டு வரும் அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
‘அரசன்’ படப்பிடிப்பு முதலில் நவம்பரில் துவங்குவதாக இருந்தது. அப்போது வேல்ஸ் நிறுவனம் – சிம்பு இருவருக்கும் ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தில் தொடங்குவது தாமதமானது.
அதனை பேச்சுவார்த்தையின் மூலம் சரி செய்தார் சிம்பு. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 9-ம் தேதி மதுரையில் படப்பிடிப்பு தொடங்கும் என மலேசியாவில் பேசும்போது சிம்பு குறிப்பிட்டு இருந்தார்.
தாணு தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘அரசன்’. அனிருத் இசையமைப்பில் இப்படம் உருவாகிறது. இதன் அறிமுக ப்ரோமோ வீடியோவுக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
முழுக்க வடசென்னை பகுதிகளில் நடைபெறும் கதையாக இதனை உருவாக்கி உள்ளார் வெற்றிமாறன். இதில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மேலும், ‘வட சென்னை’ படத்தில் நடித்த சில கதாபாத்திரங்களும் இதில் நடிக்கவுள்ளதாக வெற்றிமாறன் குறிப்பிட்டு இருந்தார்.