தமிழ் சினிமா

சிக்​னலில் நடக்​கும் பிரச்சினையை சொல்லும் ‘சிக்னல் அட் 11.30’

நிலா

சந்​தோஷ் பிரதாப், பவ்யா த்ரிகா, பூஜிதா பொன்​ணாடா, ஜெயப்​பிரகாஷ், முனீஷ்​காந்த் உள்​பட பலர் நடித்​துள்ள படம் ‘சிக்​னல் அட் 11.30’. மலர்​விழி நடேசன் இயக்​கி​யுள்ள இப்​படத்தை அவரும் ஷிவானி சுப்​ரமணி​யும் தயாரித்​துள்​ளனர்.

டி.இமான் இசையமைத்​துள்ள இப்​படத்​துக்கு ராஜா பட்​டாச்​சாரியா ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். இதன் டிரெய்​லர் மற்​றும் இசை வெளியீட்டு விழா சென்​னை​யில் நடை​பெற்​றது. படக்குழுவினருடன் இயக்​குநர்​கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு, தயாரிப்​பாளர் தனஞ்​செயன், நடிகர் விதார்த் உள்​பட பலர் கலந்துகொண்​டனர்.

இயக்​குநர் மலர்​விழி நடேசன் பேசும்​போது, “தனிப்​பட்ட ஒரு நபரின் வாழ்க்​கை​யில் 11.30 மணிக்கு சிக்​னலில் நடக்​கும் பிரச்சினைதான் கதை. எல்​லோரும் சந்​தித்​திருக்​கக் கூடிய சம்பவம் என்​ப​தால் பார்​வை​யாளர்​கள் கதையுடன் ஒன்ற முடியும். இப்​படத்​துக்கு இசை மிக முக்​கியம். இமான் சார் சிறப்​பாக அமைத்​திருக்​கிறார். அவர் இசை படத்​துக்​குப் பெரிய பலம். சந்தோஷ், புஜிதா, பவ்யா என அனைவரும் சிறந்த நடிப்​பைக் கொடுத்​திருக்​கிறார்​கள்” என்றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT