தமிழ் சினிமா

‘சிக்மா’ ட்ரெய்லர் எப்படி? - ஜேசன் சஞ்சயின் ஹெய்ஸ்ட் த்ரில்லர்

ப்ரியா

சென்னை: லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், சுந்தீப் கிஷன்  நடித்துள்ள 'சிக்மா' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

ட்ரெய்லர் எப்படி? - ரேடியோ தொகுப்பாளராக சாதாரண வாழ்க்கையை வாழும் நாயகன், தற்செயலாக ஒரு பெரிய குற்றப் பின்னணிக்குள் நுழைகிறார். சூதாட்டம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை மையமாகக் கொண்டு இயங்கும் வில்லனின் உலகத்திற்குள் சூழல் அவரை தள்ளுகிறது.

வில்லன் கும்பலை வீழ்த்தி, இழந்ததை மீட்க நாயகன் தன் நண்பர்களுடன் சேர்ந்து போடும் ஹெய்ஸ்ட் திட்டமே படத்தின் மையக் கதையாக ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. சுந்தீப் கிஷன் ஸ்டைலிஷான ஆக்‌ஷன் அவதாரத்தில் தோன்றுகிறார். அவருடன் ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், ராஜு சுந்தரம், ஷிவ் பண்டிட், அன்புதாசன், ஷீலா ராஜ்குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தமனின் பின்னணி இசையும், கிருஷ்ணன் வசந்தின் வண்ணமயமான ஒளிப்பதிவும்ட்ரெய்லரில் கவனம் ஈர்க்கின்றன. பிரவீன் கே.எல். படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வரும் அக்டோபர் 2 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

SCROLL FOR NEXT