

ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் எஸ்.ஜே.சூர்யா கதாபாத்திரத்தை படக்குழுவினர் இன்று அறிமுகப்படுத்தியுள்ளனர்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் சமூக வலைதள பக்கத்தில், ‘‘ஜெயிலர் 2’ உலகத்தில் இருந்து போதியாக எஸ்.ஜே.சூர்யாவை அறிமுகப்படுத்துகிறோம்’ என்று பதிவிட்டு, கதாபாத்திர அறிமுக வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது.
35 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில், ஜன்னல் தடுப்பு வழியாக கருப்பு நிறக் கார் ஒன்று வருவது தெரிகிறது. அப்போது ஒரு குரல் ‘ஏய் அவரோட பெயராவது தெரியுமா? போதி, போதி கல்பக்’ என சொல்ல, அந்தக் கருப்பு நிறக் காரில் இருந்து எஸ்.ஜே.சூர்யா மிடுக்காக இறங்கி நடக்கிறார். திரையில் ‘போதியாக எஸ்.ஜே.சூர்யா’ என எழுத்துக்கள் வருகிறது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் ‘ஜெயிலர் 2’. இதில் ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மேக்னா ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். மோகன்லால், சிவ ராஜ்குமார் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார்.
அக்டோபர் 15-ம் தேதி படம் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகம் செய்து வருகிறது. செப்டம்பர் 18-ம் தேதி சுராஜ் வெஞ்சரமூடு கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்திருந்தது. அவர், படத்தில் திலீப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.