சாந்தனு பாக்யராஜ் நடிக்கும் ‘மெஜந்தா’ ரொமான்டிக் காமெடி கதையாக உருவாகிறது என படக்குழு தெரிவித்துள்ளது. இதில் அஞ்சலி நாயர் நாயகியாக நடித்துள்ளார். அர்ச்சனா ரவிச்சந்திரன், ஆர்ஜே ஆனந்தி, படவா கோபி, சரத் ரவி, சவுந்தர்யா பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பரத் மோகன் இயக்கும் இந்தப் படத்தை பிராண்ட் பிளிட்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் டாக்டர் ஜேபி லீலாராம், ரேகா லீலாராம் மற்றும் ராஜு வழங்குகின்றனர். தரண் குமார் இசை அமைக்கும் இந்தப் படத்துக்குப் பல்லு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் டீஸர் இப்போது வெளியாகி இருக்கிறது. “முற்றிலும் வேறுபட்ட சாந்தனுவை இப்படத்தில் பார்க்கலாம். அவர் நடிப்பும் தோற்றமும் வேறுவிதமாக இருக்கும். ரசிகர்களுக்கு இப்படம் புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என்பது எங்கள் நம்பிக்கை. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் ரிலீஸ் தேதி ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்” என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.