தமிழ் சினிமா

ஒரே நேரத்​தில் 2 படங்களில் நடிக்கும் சண்முக பாண்டியன்

செய்திப்பிரிவு

நடிகர் சண்முக பாண்டியன் ஒரே நேரத்​தில் இரண்டு படங்​களில் நடித்து வரு​கிறார். இந்​தப் படங்​களை கேப்​டன் சினி கிரியேஷன்ஸ் சார்​பில் எல்கே சுதீஷ் எம்​.பி தயாரித்து வரு​கிறார். இதில், மணிசேயோன் இயக்​கத்​தில் உரு​வாகி வரும் கிங் அண்ட் குயின்ஸ் படத்​தில் சண்​முக பாண்​டியனுடன் ஆதியா பிர​சாத், இளவரசு, பிரக​தி, தம்பி ராமை​யா, ரமேஷ் திலக், சுனில், சங்​கீ​தா, அஞ்​சலி நாயர், மைனா நந்​தினி, நிகிலா ஷங்​கர், மகிழ் திரு​மேனி என பலர் நடிக்​கிறார்​கள்.

இப்​படத்​துக்​குப் பிரசன்ன குமார் ஒளிப்​ப​திவு செய்​கிறார். மனு ரவிச்​சந்​திரன் இசை அமைக்​கிறார். இதன் படப்​பிடிப்பு சென்னையில் நடந்து வரு​கிறது. இதற்​கிடையே திரு இயக்​கத்​தில் ‘வாண வேடிக்​கை’ படத்​தி​லும் சண்​முக பாண்​டியன் நடித்து வருகிறார். இதில் ஷிவானி ராஜசேகர் நாயகி​யாக நடிக்​கிறார். சாம் சிஎஸ் இசை அமைக்​கும் இப்​படத்​தின் படப்​பிடிப்​பும் நடைபெற்று வருகிறது.

SCROLL FOR NEXT