மாரநாடு கருப்பணசாமி கோயிலுக்கு தனுஷ் 18 அடி உயர அரிவாள் காணிக்கை

மாரநாடு கருப்பணசாமி கோயிலுக்கு தனுஷ் 18 அடி உயர அரிவாள் காணிக்கை
Updated on: 
1 min read

நடிகர் தனுஷ், ராஜ்கு​மார் பெரிய​சாமி இயக்​கி​யுள்ள ‘ஓம்’ படத்தை முடித்​து​விட்​டார். இதில் மம்​மூட்​டி, நஸ்​ருதீன் ஷா, இந்திரன்​ஸ், சாய் பல்​ல​வி, ஸ்ரீலீலா உள்பட பலர் நடித்​துள்​ளனர். இப்​படம் அக். 16 -ல் வெளி​யாகும் என்று அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இந்​நிலை​யில் ரஜினி​யின் ‘ஜெ​யிலர் 2’ திரைப்​படம் அக்​.15-ல் வெளி​யா​வ​தால், இதன் ரிலீஸ் தள்ளி வைக்​கப்பட்​டுள்​ளது.

இதையடுத்து அவர் ‘லப்​பர் பந்​து’ இயக்​குநர் தமிழரசன் பச்சைமுத்து இயக்​கும் படத்​தில் நடிக்​கிறார். மதுரை பின்னணியில் உரு​வாகும் இதன் படப்​பிடிப்பு சிவகங்கை அருகே உள்ள மாரநாடு கருப்பணசாமி கோயி​லில் பூஜை​யுடன் நேற்று தொடங்​கியது.

இதில் எஸ்​.ஜே.சூர்​யா, வடிவேலு, உறியடி விஜயகு​மார், பிரீத்தி முகுந்​தன் ஆகியோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடிக்கின்றனர். சாய் அபயங்​கர் இசை அமைக்​கிறார்.

சித்​தாரா என்​டர்​டெ​யின்​மென்ட்​ஸ், ஸ்ரீகரா ஸ்டூடியோஸ் மற்​றும் பிரி​மார்க் புரொடக் ஷன்ஸ் ஆகிய நிறு​வனங்​கள் இணைந்து இப்​படத்​தைத் தயாரிக்​கின்​றன. ​படத்தை அடுத்து ஆண்டு கோடை​யில் வெளி​யிட படக்​குழு திட்​ட​மிட்​டுள்​ளது.

இதற்​கிடையே, இப்​படத்​தின் பூஜையை முன்​னிட்டு மார​நாடு கருப்​பண​சாமி கோயிலுக்கு 18 அடி உயர அரி​வாளைக் காணிக்கை​யாக வழங்​கி​யுள்​ளார் தனுஷ். அவர் வரு​வதை அறிந்து அங்கு ஏராள​மான ரசிகர்​கள் குவிந்​தனர். அவர்களுக்கு 20 ஆடுகள் வெட்டி விருந்து வைக்கப்பட்டது.

மாரநாடு கருப்பணசாமி கோயிலுக்கு தனுஷ் 18 அடி உயர அரிவாள் காணிக்கை
The Paradise: விமர்சனம் - அதீத வன்முறையில் தொலைந்த திரைக்கதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in