தமிழ் சினிமா

ரீரிலீஸ் ஆகிறது சீமான் இயக்கிய ‘தம்பி’

செய்திப்பிரிவு

மாதவன், பூஜா, மலையாள நடிகர் பிஜு மேனன், மணிவண்ணன் உள்பட பலர் நடித்த படம், ‘தம்பி’.

2006-ம் ஆண்டு பிப்.22-ம் தேதி வெளியாகி வெற்றி பெற்ற இப்படத்தில் தம்பிவேலு தொண்டைமான் என்ற ஆக்ரோஷமான இளைஞராக மாதவன் நடித்திருந்தார். அவர் நடிப்பும் படத்தின் வசனங்களும் அப்போது பேசப்பட்டன.

இந்தப் படம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரீரிலீஸ் ஆகிறது. உத்தாரா புரொடக் ஷன்ஸ் சார்பில் ஹரி உத்தாரா இப்படத்தைப் பிப்ரவரி 20-ம் தேதி வெளியிடுகிறார்.

சமீபகாலமாக பழைய ஹிட் படங்களை ரீ ரிலீஸ் செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. சில படங்கள் மறுவெளியீட்டிலும் சாதனை படைப்பதால் இன்னும் பல சூப்பர் ஹிட் படங்களை மறுவெளியீடு செய்வதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

SCROLL FOR NEXT